வவுனியா பழைய பேருந்து தரிப்பிடம் அமைந்துள்ள நகரசபை கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந் நிலையில் படுக்காயமடைந்த பெண் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா நகரசபையின் கட்டிடத் தொகுதியில் பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.
இதன்போது அங்குள்ள கடை ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டிருந்த பெண் மீது கட்டிடத்தின் மேல்தளம் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் பொலிஸ் மற்றும் நகரசபைக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள காயமடைந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை இடிந்து வீழ்ந்த கட்டிடத்தொகுதி தொடர்பில் , வவுனியா நகரசபைக்கு பல தடவைகள் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டும் வவுனியா நகரசபை நடவடிக்கை எடுக்கவில்லை குறித்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.