தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளுகிடையிலான அவசர சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது
குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிக விடுதலை முன்னணி சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் து.கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.