கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இத்தாலி குடும்பம் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் 72 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் இன்று பகல் அநுராதபுரம் மருத்துவமனையில் பொலிஸாரின் உதவியுடன் அனுமதிக்கபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை அவர்கள் பயன்படுத்திய காரை மருத்துவமனை அதிகாரிகள் கிருமிநாசினி இட்டு சுத்தப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.