மட்டு கம்பஸ், கந்தாக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டு பணத்தினை வாழைச்சேனை இலங்கை வங்கியில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மட்டு கம்பஸ், கந்தாக்காடு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் வெளிநாட்டு பணத்தினை வாழைச்சேனை இலங்கை வங்கியில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இந்நிலையில் அது தொடர்பாக தகவல் அறிந்த பிரதேச இளைஞர்கள் வங்கியின் முன்பாக கூடி நின்று இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வங்கி நடவடிக்கைகளில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் தொடரும் நிலையில் நேற்று இத்தாலி மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து பயணிகள் அழைத்து வரப்பட்டு மட்டு கம்பஸ் மற்றும் கந்தக்காடு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் தமது பணங்களை குறித்த வங்கியில் மாற்றுவதற்கு எடுத்த முயற்சி தொடர்பான தகவல் அறிந்தே இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வங்கியின் முன்பாக கூடிய இளைஞர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
அத்துடன் வெளிநாட்டு பணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கலாம் என்றும், அவை தமது பிரதேசங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும் அச்சம் வெளியிட்டே இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை கேட்டறிந்ததுடன் அவ்வாறான தகவல் பொய்யானது என்றும் குறித்த செயற்பாடு வங்கியில் இடம்பெறாது எனவும் தெரிவித்ததை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றதாகவும் தெரிவிக்கபடுகின்றது.