ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்றைய தினம் கூடவுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய கூட்டத்துக்கு சமூகம் தருமாறு கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் மேற்கொள்ளப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டு மனந்தளரவில்லை.
இதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் தமது இலக்குகளை எய்த அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.


















