நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 25ம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதான கட்சிகள் அனைத்து தேர்தலில் போட்டியிடும் நோக்கில் மும்முரமாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்து வரும் நிலையில், வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளன.
எனினும், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனம் குறித்து பல்வேறு தரப்பினர்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.