மஹிந்த ராஜபக்ஷ தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆதுரலியே ரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விஜய தரணி தேசிய கவுன்சில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து தலைப்பில் உரையாற்றினார்.
கடந்த 15 ஆண்டுகளாக ஒரு எம்.பி.யாக தொடர்ந்து பதவிகளை வகிப்பவர் நான் மட்டுமே, எந்தவொரு பெளத்த துறவியும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது நான்தான். இதன் பிறகு நான் தேர்தலில் போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் இது எனக்கு ஒரு பொருட்டல்ல.
ஆனால் அரசியலில் இருப்பது ஒரு எம்.பி. ஆக வேண்டும் என்று அர்த்தமல்ல. நான் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்களிடமும் இதனை சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.