நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதிவில்,
நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளிலிருந்தும் வரும் நபர்கள் மிகவும் முறையான வேலை திட்டங்களின் கீழ் தனிமைப்படுத்த படுகின்ற நிலையில் அனைத்து தொற்றாளர்களுக்கும் உரிய சிகிச்சையை பெற்றுக் கொடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளன.
அதன் காரணமாக நாட்டின் எந்த ஒரு நபரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. வழமையான பொது வாழ்வினை பாதிக்கும் எந்த ஒரு நிலைக்கும் அரசு இடமளிக்கவில்லை. அதேபோல் வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.