முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான கட்சி சஜித் பிரேமதாச தலைமையிலான கட்சியுடன் இணைந்து உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகயுடன் இணைந்தே குறித்த உடன்படிக்கையில் கைசாத்திட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இரு கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.