கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கிம் ஜாங் உன் வட கொரிய தலைநகரிலிருந்து கடற்கரைக்கு தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில காலத்திற்கு மட்டும் தலைநகர் பியோங்யாங்கிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக Chosun Ilbo பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸானது தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் தற்போது நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள Wonsan நகரத்தில் இருப்பதாக உள்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய நிலையில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 180 வீரர்கள் இறந்துவிட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
தென் கொரியாவின் NK செய்தித்தாளிற்கு, வடகொரிய இராணுவத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக தெரியவந்துள்ளது. அதில், இறந்தவர்களின் எண்ணிக்கையை கசியவிட்டதோடு, பெரும்பாலான இறப்புகள் சீனாவின் எல்லைக்கு அருகிலேயே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் 3,700 வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக செவ்வாயன்று வட கொரிய ஊடகங்கள் வெளியிட்ட கிம் ஜாங் உன்னின் மிக சமீபத்திய புகைப்படங்கள், அறியப்படாத இடத்தில் ஒரு நேரடி தீயணைப்பு பீரங்கிப் பயிற்சியை மேற்பார்வையிடுவதைக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.