கொரோனா வைரஸை பொது சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், பலர் இறக்க நேரிடலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கொரோனா வைரஸை ‘ஒரு தலைமுறையின் மிக மோசமான பொது சுகாதார நெருக்கடி’ என்று கூறினார். மேலும் ‘இன்னும் பல’ மக்கள் இறக்கப்போகிறார்கள் என்று எச்சரித்தார்.
இந்த நோயானது தொடர்ந்து உலகம் முழுவதும் பரவும் என்பது தெளிவாக தெரிகிறது. பல மாதங்களாக ‘கடுமையான இடையூறு’ என்ற ‘யதார்த்தத்திற்கு’ மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
விளையாட்டு நிகழ்வுகளுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறிய அவர், அதனை செயல்படுத்த வேண்டிய நேரம் இப்போது இல்லை என தெரிவித்தார்.
‘எல்லா நிலைகளிலும் நாம் அறிவியலால் வழிநடத்தப்பட்டிருக்கிறோம். சரியான நேரத்தில் சரியானதைச் செய்வோம்,’ என்றார்.
இதனை பருவகால காய்ச்சலுடன் ஒப்பிடுவது தவறானது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது, மேலும் பரவப் போகிறது. அதிகமான குடும்பங்கள், இன்னும் பல குடும்பங்கள், தங்களது அன்புக்குரியவர்களை அவர்களுக்கான காலத்திற்கு முன்பே இழக்கப் போகிறார்கள் என கூறியுள்ளார்.