கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை, இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் 5 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது மக்களிடையே பீதி ஏற்பட்டிருக்கிறது.
பொது மக்களிடம் தேவையற்ற அச்சம் மற்றும், கொரோனா பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில், பிரதமரின் ஆலோசனைக்கமைய, இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் கீழ் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிடலை நிறுத்துமாறு கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.