நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை எடுக்கவே இல்லை என்று அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,”பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். பொதுமக்கள் தாமே தம்மைத் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
திட்டமிட்டவாறு ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அந்தத் தீர்மானத்தில் மாற்றம் எதையும் நாம் இதுவரை செய்யவில்லை.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவை மார்ச் 26ஆம் திகதிவரை அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்துவதில்லை என்று அறிவித்துள்ளன. அந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும்” – என்றார்.