இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீ தியடைந்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் அவருக்கும், ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இருவரும் சேர்ந்து கடந்த மாதத்தில் இத்தாலிக்கு தேனிலவு சென்றுள்ளனர்.
அதன்பின் இந்தியா வந்த அப்பெண்ணின் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் கொரோனா பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவரை தனிமைப்படுத்திக் க ண்காணிப்பில் வைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் , அப்பெண் யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து விமானம் ஏறி டெல்லிக்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து ரயில் மூலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பெங்களூருவிலிருந்து த ப்பித்து ஆக்ரா சென்ற தகவல் ஆக்ரா அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவரின் தந்தையோ அங்கு இல்லை எனக் கூறி அதிகாரிகளை உள்ளே விட மறுத்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் காவலர்களோடு அங்குச் சென்ற அதிகாரிகள், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி மருத்துவ க ண்காணிப்பில் வைத்துள்ளனர்.
கரோனா பாதிப்பிற்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ள அந்த பெண், கரோனா பாதிக்கப்பட்ட தனது கணவனை விட்டுவிட்டு பொது போக்குவரத்து வாயிலாகத் தகுந்த பா துகாப்பு இன்றி டெல்லி வரை சென்றது பொதுமக்களிடையேயும், அப்பகுதி பயணிகளிடையேயும் ஒரு வித அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.