இத்தாலியில் இருந்து வந்த 2 கொரோனா நோயாளிகள் இலங்கையில் பலரையும் ஆபத்தில் ஆழ்த்தியிருப்பதாக இலங்கையின் சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார சேவையின் இயக்குனர் நாயகம் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஒருவர் 56 வயதான பெண் மார்ச் 07 அன்று இத்தாலியில் திரும்பியவர் எனவும், மற்றவர் 17 வயது சிறுமி, முன்னர் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நோயாளியின் உறவினராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இத்தாலியில் இருந்து வந்த 56 வயதான சுற்றுலா வழிகாட்டி மற்றும் 42 வயதான ஆண் நோயாளி தங்களின் உண்மையான நிலைமையை வெளியில் கூறாமல் பலரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாயகம் அணில் ஜாசிங்க வேதனை தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் இல்லை என இத்தாலியிடம் பொய் கூறிய அந்த இருவரும், மிலன் விமான நிலையத்திலிருந்து வர முடியாது என்பதால் அவர்கள் ஒரு கிராமப்புற விமான நிலையத்திலிருந்து வந்து காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரின் செயலால் கந்தகுடா மையத்தில் உள்ள பலரும் ஆபத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.