நண்பரை கொலை செய்துவிட்டு அந்த பிணத்துடனே உறவு வைத்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில், ஜார்கண்ட் பகுதியை சேர்ந்த மூன்று நண்பர்கள், கடந்த நாட்களுக்கு முன்னர் மது அருந்தியுள்ளனர். அப்போது அந்த மூன்று பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதனால், இரண்டு நண்பர்கள் சேர்ந்து மற்றொரு நண்பரின் கழுத்தை நெரித்து ஆத்திரத்தில் கொலை செய்து இருக்கின்றனர். அதன் பின்னர் இழந்த தங்களின் நண்பருடன் பாலியல் உடலுறவு வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அதன் பின்னர், அந்த சடலத்தை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர், மீண்டும் மறுநாள் காலை போதை தெளிந்து நண்பனின் சடலத்தை அப்புறப்படுத்த அங்கே வந்து இருக்கின்றனர்.
இதனை அறிந்த அந்த இறந்து போனவரின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான நண்பர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.