பருத்தித்துறை பஸ் நிலையப்பகுதிக்கு அண்மையில் மண்ணெண்ணைய் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதியில் வெள்ளம்போல் மண்ணெண்ணெய் ஓடி பெரும் பரபரப்பு நிலவியது.
அப்பகுதி மக்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்களில் குறித்த எண்ணெய்யை சேகரித்தச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தையடுத்து பருத்தித்துறை நகரசபையினர் குறித்த இடத்திற்கு மண் இட்டு மூடியுள்ளனர்.