ஆண்டுதோறும் மீளவும் வரக்கூடிய கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சேர் பற்றிக் வலன்ஸ் (Sir Patrick Vallance ) தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்புச் சக்தியைப் பெற பிரித்தானிய மக்கள் தொகையில் சுமார் 60% பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நோயெதிர்ப்புச் சக்தி என்பது ஒரு மக்கள் தொகைக்குள் ஒரு தொற்று நோய்க்கான எதிர்ப்பாகும். போதுமான மக்கள் நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறுவர் என்றும் அதனால் வரும்காலத்தில் நோய் பரவுவது கடினம் என்றும் சேர் பற்றிக் வலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸுக்கு தற்போதுவரையில் தடுப்பூசி எதுவும் உருவாக்கப்படவில்லை.
இதுவரை, பிரித்தானியாவில் COVID-19 எனப்படும் வைரஸிலிருந்து உருவாகும் நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று வியாழக்கிழமை 596 ஐ எட்டியது. இருப்பினும் வைரஸ் பாதிப்புள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை 5,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என்று சேர் பற்றிக் வலன்ஸ் கூறியுள்ளார்.
COVID-19 என்பது ஒரு மோசமான வைரஸ் என்று விவரித்த அவர் பெரும்பாலான மக்கள் நோயின் லேசான அறிகுறியை மட்டுமே கொண்டிருப்பர் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.