பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இன்று முற்பகல் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தினார்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சநிலைக்கு மத்தியில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான கோரிக்கைள் முன்வைக்கப்பட்டு வருவது தொடர்பில் பேசியுள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.
இந்நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.