நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.