தற்போது உலக நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வருகின்றது.
இந் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விஷேட முன்னோடி நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே கையை சுத்தப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ் நிலையத்திற்குள்ளே வரும் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பொலிசாரின் இந்த செயற்பாடானது அனைத்து சமூகத்திற்கும் முன்னோடியாக விளங்குவதுடன், பொதுமக்களும் இதற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.