முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி குறித்து ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த கூட்டணி செல்லுபடியாகாது என்றும், அதன் யாப்பு சட்ட சிக்கலுக்கு முகம் கொடுக்கும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, அந்தக் கூட்டணி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ரணில் அணியினர் அதிர்ந்துபோயுள்ளதாக கூறப்படுகின்றது.