இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 18 பேர் இடங்காணப்பட்டுள்ளானர்.
இந்த நிலையில் நாடு முழுவதிலும் இன்று திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மிகவும் பரபரப்பு மற்றும் சனநெரிசலாக காட்சியளிக்கும் கொழும்பு நகரம் இன்று வெறிச்சோடிக் காணப்படுகின்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, ஏனைய முக்கிய நகரங்களான நாடாளுமன்றம் அமைந்துள்ள பத்தரமுல்ல, கண்டி, அநுராதபுரம் உள்ளிட்ட பல நகரங்களிலும் இன்று மக்களின் நடமாட்டம் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.