உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அணைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில் பிரித்தானியாவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
நாட்டு மக்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனது ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது வழங்கி வருகின்றார்.
இந்த நிலையில் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளின் அவசரப்பிரிவுகள் உயிர்ப்புடன் இயங்கிவருகின்றது.
அவசரப்பிரிவுகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து சேவைசெய்வது பெரும் பாராட்டுக்களை பெற்றுவருகின்றது.
குறிப்பாக பிரித்தானியாவில் பெருமளவு தமிழ் வைத்தியர்கள் அவசரப்பிரிவுகளில் தற்போது கடமைபுரிந்த வண்ணம் உள்ளனர்.
நாட்டின் பிரதமர் மக்களை முடிந்தவரை தனிமைப்பட்டு வீடுகளில் இருக்குமாறு வேண்டியுள்ளார்.
ஆனால் வைத்தியசாலையில் கடமைபுரிபவர்கள் அர்ப்பணிப்புடன் கடமை செய்கின்றார்கள்.
இந்த நிலையில் வேல்ஸ்சில் உள்ள வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் கடமையாற்றும் கிளிநொச்சியை தாயகமாக கொண்ட வைத்திய கலாநிதி மதியழகன் கருத்துத் தெரிவிக்கையில். இது உலகம் முழுவதும் அச்சுறுத்தும் வைரஸ்.
தாம் அனைவரும் முழு மூச்சுடன் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடுகின்றோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மிகவும் சவால் நிறைந்த இந்த நோயை தீர்த்துக் கட்டுவதில் பலரும் அச்சப்படும் நிலையில் பிரித்தானிய வைத்தியர்களுடன் தமிழ் வைத்தியர்களும் இணைந்துள்ளமை பலராலும் பாராட்டப் படுகிறது.