கன்னியாகுமரியில் மருமகனோடு தவறான உறவு கொண்டிருந்த தாய் ஒருவர் 13 வயது மகனை கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கவியக்காளை மலையடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா, இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார்.
இதனையடுத்து 15 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சிறுவன் மயங்கிவிட்டதாக கத்தி கூச்சலிட்டுள்ளார், உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றும் பரிதாபமாக உயிரிழந்தான்.
தொடர்ந்து சிறுவனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது, ஆனால் வசந்தாவின் கணவர் மோகன் தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதாவது வசந்தாவுக்கும், அவரது மருமகனான சுபனனுக்கும் தவறான தொடர்பு இருந்ததும், தனியாக இருக்கும் போது சிறுவன் பார்த்து விட்டதால் தூக்க மாத்திரை கொடுத்து கொன்றதும் தெரியவந்துள்ளது.
மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சுபனனை மகளுக்கே திருமணம் செய்து வைத்து தன்னுடன் வைத்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.