தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் நேற்ரையதினம் வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கைச்சாத்திடும் நிகழ்வு பெலவத்தை பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதியாக மார்ச் 19 நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.