நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காரணமாக 204 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரு வெளிநாட்டவர் (ஜனவரியில் இனங்காணப்பட்ட சீன பெண்) மற்றும் 28 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தவகையில் இன்று (மார்ச் 17) காலை 10 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 72 பேரும் ( ஒரு வெளிநாட்டவர் உள்பட), தேசிய வைத்தியசாலையில் 19, ராகம போதனா வைத்தியசாலையில் 6பேரும் ஹராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 15 பேரும் (2 வெளிநாட்டவர்கள் உள்பட) அநூராதபுரம் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் குருணாகல போதனா வைத்தியசாலையில் 13 பேரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் 4 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர், ஹம்பகா மாவட்ட பொது வைத்தியசாலையில் 14 பேரும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 பேரும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 12 பேரும் லேடி ரிஜ்வெய் சிறுவர் வைத்தியசாலையில் 2 பேரும் என மொத்தமாக 204 பேர் கொரோனா அறிகுறிகள் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.