ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கு சீன மாணவர்கள் தான் காரணம் என நாட்டின் மிக முக்கியமான சன்னி மதகுரு மொலவி அப்துல்-ஹமீத் தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொளியில் கூறினார்.
அப்துல்-ஹமீத் கூறியதாவது, ஷியா புனித நகரமான கோமில் உள்ள அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தில் (எம்ஐயு) படிக்கும் சீன மாணவர்கள் ஈரானுக்கு கொரோனா வைரஸைக் கொண்டு வந்தனர் என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அரசு நிதியுதவி அளிக்கும் எம்ஐயு ஷியா செமினரி ஆகும், இதில் கிட்டத்தட்ட 40,000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல்-ஹமீதுக்கு பதிலளிக்கும் வகையில் எம்ஐயு அறிக்கையை வெளியிட்டது, சன்னி மதகுருவை விமர்சித்து, ஈரானில் கொரோனா வைரஸ் பரவியதின் பின்னணியில் அதன் சீன மாணவர்கள் இருப்பதை மறுத்துள்ளது.
ஏதேனும் அதிகாரிகள் அத்தகைய கூற்றுக்களை முன்வைத்திருக்கிறார்களா அல்லது ஏதேனும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதா? என எம்ஐயு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.