உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 162 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகளவில் 7,954 பேர் உயிரிழந்துள்ளனர். 197,766 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 418 பேருக்கு நோய் உறுதியானது. உலகளில் மொத்தம், 81,691 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றை தவிர்க்க பாதிக்கப்பட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
சீனாவில் மட்டும் கொரோனாவிற்கு 3,226 பேர் பலியாகியுள்ளனர். 80,881 பேருக்கு நோய் தொற்று உள்ளது. எனினும், நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் 13 பேர் பலியாகியுள்ளனர். 21 பேருக்கு நோய் தொற்று உறுதியானது, அதில் 20 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள்.
வெளிநாட்டிலும் திரும்பி வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என வுஹான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.