நடைபெறவுள்ள தேர்தலின் வலுவான ஆணை வழங்குங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தேசிய உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும்,
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறையின் போது ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் மற்றும் களியாட்டங்களிலிருந்து முற்றாக விலகியிருக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவத முடியும்.
நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தலைமைத் தாங்க வேண்டும்.
விடுமுறையின்போது நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு உரப் பிரச்சினை போன்றன இருக்கின்றன. ஆகவே, நாங்கள் சமூகத்தை கவனத்தில் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
இதேவேளை, தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை உருவாக்கி புதிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றி உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதனால், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வலுவான ஆணையை வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
அத்தோடு, தற்போதைய நிலையில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு இடமளிக்க முடியாது. தூரநோக்குடன் செயற்பட்டால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்பட முடியும்.
மேலும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. இந்த நிலையில் இலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று சவாலுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயார்.
ஆனால், அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக மக்கள் ஆதரவளித்து செயற்பட வேண்டும். இதேவேளை, மக்களுக்கு பாதிப்பில்லாது பொருளாதாரம், சந்தை, போக்குவரத்து, வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.