கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நோய் யாரை அதிகம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக மாறி வரும் கொரோனா வைரஸால், பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த நாடுகளின் வரிசையில் பிரித்தானியாவும் உள்ளது. பிரித்தானியாவில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,543-ஆக உள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் அதிகரிக்கும் என்று பிரித்தானிய அதிகாரிகளால் எதிர்பார்க்கப்படுவதால், அந்நாட்டு அரசு தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஒரு சில எச்சரிக்கைகளையும் விடுத்து வருகிறது.
இதற்காக முன்னர் பெரும்பாலும் வயதானவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்கள் கொரோனாவால் பாதிப்பதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக பிரித்தானியா அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கு என்ற புதிய பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
- 70 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் (அவர்களின் மருத்துவநிலையை பொறுத்து)
- ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள்
- இதய செயலிழப்பு போன்ற நீண்டகால இதய நோய்
- நாள்பட்ட சிறுநீரக நோய்
- நாள்பட்ட கல்லீரல் நோய்
- பார்கின்சன் நோய்(நடக்க முடியாமல் மிகவும் தள்ளாடுபவர்கள்), motor neurone நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், கற்றல் குறைபாடு அல்லது பெருமூளை வாதம் போன்ற நாள்பட்ட நரம்பியல் நிலைகள் உள்ளவர்கள்
- நீரிழிவு நோய்
- உங்கள் மண்ணீரலில் உள்ள சிக்கல்கள் (உயிரணு நோய் அல்லது உங்கள் மண்ணீரல் அகற்றப்பட்டிருந்தால்)
- எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகள் அல்லது கீமோதெரபி போன்ற மருந்துகளின் விளைவாக பலவீனமாகும் நோயேதிர்ப்பு அமைப்பு.
- தீவிரமாக அதிக எடையுடன் இருப்பது (40 அல்லது அதற்கு மேற்பட்ட BMI)
- கர்ப்பமாக இருப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து கடுமையான நோய் ஆபத்து அதிகம் உள்ள சிலர் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் தொடர்ந்து நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளில் இருப்பவர்கள்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செயலில் கீமோதெரபி அல்லது கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
- சிகிச்சையின் எந்த கட்டத்திலும் இருக்கும் ரத்த புற்றுநோய் அல்லது லுகேமியா போன்ற எலும்பு மஜ்ஜை உள்ளவர்கள்.
- சிஸ்டிக் பைப்ரோஸிஸ் அல்லது கடுமையான ஆஸ்துமா போன்ற கடுமையான மார்பு நிலைமைகளைக் கொண்டவர்கள். (மருத்துவமனையில் அனுமதி அல்லது ஸ்டீராய்டு மாத்திரைகளின் ஆலோசனை தேவை)
- கடுமையான சிறுநீரக நோய் (டயாலிசிஸ்) போன்ற உடல் அமைப்புகளின் கடுமையான நோய்கள் உள்ளவர்கள்.
ஆபத்தில் இருக்கும் எவரும் எவ்வாறு சமூக ரீதியாக தங்களைத் தூரம் விலக்கிக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் தனிமையில் இருக்கும்போது அவர்கள் எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் உள்ளவர்கள் – 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலம் தொடர்பைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளார்.
அனைத்து சமூக தொடர்புகளையும் தவிர்ப்பது குறித்த இந்த ஆலோசனை 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.