இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் எகிறும் நிலையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், வயதான நோயாளிகள் தொடர்பில் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 345 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மரணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் 3,526 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 31,506 பேர் இலக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலிய சுகாதாரத்துறை கடுமையாக போராடி வரும் நிலையில், வயதான நோயாளிகளை கைவிடுவதாகவும் தகவல் வெளிவருகின்றன.
ஒவ்வொரு நாளும் நண்பகல் 1 மணிக்கு பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் இருக்கும் 25 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து நிலையை விளக்குகின்றனர்.
எந்த மருத்துவரும் நோயாளிகள் தொடர்பில் அவர்களின் உறவினர்களுக்கு பொய்யான நம்பிக்கையை அளிப்பதில்லை.
மருத்துவமனை படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பது போன்றே இட வசதியும் பற்றாக்குறையில் உள்ளது.
ஒவ்வொரு முறை ஒரு படுக்கை காலியானால், அந்த இடத்தில் எந்த நோயாளியை அனுமதிப்பது என்ற முடிவை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் மருத்துவர்களுக்கு கடுமையான மனப் போராட்டத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
வயதான பல நோயாளிகளும், மருத்துவமனையில் இருந்து உரிய சிகிச்சை கிடைக்காமல் சாவதைவிட குடியிருப்பில் இருந்து சாவதே மேல் என தங்கள் உறவினர்களிடம் கோரிக்கை வைப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னர், குடியிருப்பில் இருந்தே நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதை அடுத்து கடுமையான சட்டங்கள் அமுலில் இருப்பதால், தற்போது அந்த நடவடிக்கையை மருத்துவமனைக:ள் ரத்து செய்துள்ளன
மட்டுமின்றி தற்போது தேவையின்றி இத்தாலிய மக்கள் குடியிருப்பில் இருந்து வெளியே செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது.