உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக மக்களிடையே பெருத்த அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதன் முக்கிய நடவடிக்கையாக கருதப்படும் பொது இடங்களில் கூடாதிருத்தல் என்பதை விளக்கும் மிகச்சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 12 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள தீக்குச்சிகளில், முதல் தீக்குச்சியில் நெருப்பு பற்ற தொடங்கியதும், அடுத்தடுத்த தீக்குச்சிகளில் நெருப்பு பரவி அடுத்தடுத்து தீக்குச்சிகளும் பற்றி எரிந்து கொண்டே வருகின்றன.
திடீரென இடையில் இருந்த ஒரு தீக்குச்சி எதிர்பாராத விதமாக தன்னுடைய வரிசையிலிருந்து சட்டென விலகி விடுகிறது. இதனால் இதற்கு அடுத்த தீக்குச்சிகள் தீப்பற்றுவதும் தடுக்கப்படுகிறது.
இந்த வீடியோவை உருவாக்கி பதிவிட்டுள்ள ஜுவான் டெல்கன் என்பவர், ‘ஆக நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். உங்கள் பங்கை நீங்கள் செய்யுங்கள். வீட்டிலேயே இருங்கள்’ என்கிற கேப்ஷனை கொடுத்து பகிர்ந்துள்ளார். பலரையும் யோசிக்க வைத்த இக்காட்சி தீயாய் பரவி வருகின்றது.
Do your part and stay home. It’s all we can do. pic.twitter.com/dLOkV3znNe
— juan delcan (@juan_delcan) March 16, 2020