தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளரான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.