திருகோணமலை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த மூதூர்-தக்வா நகரைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு தடவைக்கும் மேலாக மருந்துகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் அவரது உறவினர் ஒருவர் நோயை கூறி மருந்து எடுக்க சென்ற வேளை பொலிசாருக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் திணைக்களத்தினூடாக தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோயாளியின் இரத்தம் பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாகவும், குறித்த நபரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் மூதூர் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார திணைக்களத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.