இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நேற்று மட்டும் ஒரே நாளில் 475 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது.
மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு 15,113 உடன் ஒப்பிடும்போது இத்தாலியில் இப்போது 35,713 நோய்த்தொற்றுகள் உள்ளன.
மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
கடந்த இருநாள்களில் மட்டும் அந்நாட்டில் 700இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இதுவரை 5,710 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இத்தாலியின் பொருளாதாரத் தலைநகராக திகழும் லும்பார்டி பிராந்தியத்தில் மட்டும் 1,420 பேர் உயிரிழந்துள்ளனர்.