இணக்க அரசியலில் கிடைத்தது இது தானா? என தமிழ் மக்கள் இன்றும் வலியுடன் கேட்கும் கேள்விகள்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினா திறந்து வைத்தார்.
இதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவரினுடைய மகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டார்.
எனினும், இந்நிகழ்வானது வடக்கு மக்களின் மத்தியில் பெரும் விமர்சனத்ததை ஏற்படுத்தியிருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் வருகையினையொட்டி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எதிர்பார்ப்பிலிருந்த வடக்கு மக்களுக்கு இதுவொரு பாரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது.
இணக்க அரசியலில் எத்தனையோ விடயங்களை சாதித்திருக்க முடியும் ஆனால் பிரதானமான அத்தனையையும் விட்டு… விட்டு இப்படியான செயல்களை செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் இன்று வரை கோபத்தையும் விரக்கதியும் ஏற்படுத்தியுள்ளது.