நடிகை சமந்தா தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி தனது சிறந்த நடிப்பினால் இரு திரையுலகிலும் முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தவர்.
இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் சூப்பர் deluxe. இப்படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க போகிறார்.
இப்படத்தில் முதன் முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகை சமந்தா.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் “நாள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் விதவிதமான உடையை அணிகிறேன். அந்த ஒரு விஷயத்தை வைத்து கொண்டு என்ன பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்”.
இதனை தொடர்ந்து பேசிய சமந்தா “ஏன் திருமணத்திற்கு பின்பு ஒரு விழாவிற்கு நான் அணிந்து சென்ற உடையை வைத்து கொண்டு என்ன மிகவும் கடுமையாக விமர்சித்தனர். அந்த ஒரு விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை அளித்தது”.
மேலும் அதை மீறி கூட நான் அடுத்த முறையும் அப்படி தான் உடை அணிந்து சென்றேன். ஆனால், அதற்கு முன் வந்த விமர்சனத்தை விட இதற்கு குறைவாக தான் வந்தது. இதனால் ஒரு முயற்சியை முதலில் செய்தால் அதற்க்கு மிகவும் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏன் ஒரு பெண் திருமணத்திற்கு பின் மார்டன் உடையை அணிய கூடாதா? என்று வெளிப்படையாக கூறினார் நடிகை சமந்தா.