உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது இலங்கையிலும் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு பல மிக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒவ்வொருவரும் நாளாந்தம் 2 முறை தமது உடல் வெப்பத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சமூக விசேட வைத்தியர் பிரியங்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
காய்ச்சல், இருமல், தடிமல், தொண்டை வலி ஆகியன காணப்படுமாயின் உடனடியாக பிரதேச பொது மக்கள் சுகாதா பரிசோதகரை சந்தித்து அரசாங்க வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.
இதற்காக பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
1990 என்ற சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவையை வீட்டுக்கு வரவழைத்துக் கொள்ள முடியும். இந்த அம்புலன்ஸ் சேவை 24 மணித்தியாலமும் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு அமைவாக முதல் வாரத்திலும் பார்க்க அது பரவியமை இரண்டாவது வாரத்தில் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைவரும் அவதானத்துடன் செயல்பட வேண்டும். எப்பொழுதும் தேக ஆரோக்கியம் அற்றவர்களையே இந்த வைரஸ் பாதிக்கும்.
நோயாளி என சந்தேகிக்கப்படும் போது அவர்களில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.