கொரோனா வைரஸ் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அவர் பேசியதாவது, அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத எதிரி. அதை அழித்தே தீருவோம். கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்துக்கான சோதனை துவங்கியுள்ளோம். ஒரு ஆண்டு நீடிக்கும் சோதனையை கூட சில நாட்களிலேயே முடித்திருக்கிறோம்
மேலும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ தொழில் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் என கூறியுள்ளார்.
கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு 15 அறிவுரைகள் வழங்கியுள்ளோம் எனவும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அப்பொழுதும் அவர் வெளியிட்டிருந்த ட்விட்டரில் இது சைனா வைரஸ் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கொரோனா முதலில் சைனாவிலிருந்து தொடங்கினாலும் தற்போது மேற்கத்திய நாடுகளில்தான் தாக்கமானது மிக அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா பொருளாதாரத்தினை மிகவும் பாதித்த வைரஸ் தற்போது அமெரிக்க பொருளாதாரத்தையும் வாட்டி வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.