திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் காப்புக்காட்டு பகுதியில் வசித்து வருபவர் சௌந்தர். இவர் கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்துக்கு பிறகு அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இதனிடையே கர்ப்பமான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது பிரசவ வலி ஏற்பட்டவுடன் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்காமல் காதலன் சௌந்தரே மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உயிர் இழந்தது.
இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சௌந்தரை கைது செய்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.