சீன மருத்துவர்கள் செய்த தவறுகையே ஐரோப்பிய மருத்துவர்களும் செய்வதன் காரணமாகவே, அங்கு கொரோனா புதிய மையமாக உருவெடுத்துள்ளது என்று மருத்துவர் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனாவுன் வுஹானில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
உலகின் வளம் மிக்க, மருத்து கட்டமைப்பு கொண்டே இத்தாலியே கொரோனாவிடம் இருந்து சிக்கி தவிக்கிறது. இதனால் ஐரோப்பாவில் என்ன தான் நடக்கிறது? இந்த நோய் எப்படி தான் பரவிகிறது? எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம், சீன மருத்துவர்கள் செய்த அதே தவறு தான் என்று சீன நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பீகிங் யூனியன் மெடிக்கல் காலேஜின் கேஸ்ட்ரோ எண்டராலஜி பேராசிரியர் டாங் வூ கூறுகையில், நம் ஐரோப்பிய சக மருத்துவர்கள் தங்களது தினசரி மருத்துவ நடைமுறைகளில் கொரோனாவினால் தாங்கள் பாதிக்கப்படுவதோடு பிறருக்கும் அதனைத் தொற்றச் செய்கின்றனர்.
முதலில் மருத்துவ ஊழியர்களை பாதுகாக்க வேண்டும், இதுதான் முதற்படி.
அமெரிக்கா முதல் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் தற்காப்புக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணக்கள் தட்டுப்பாடாகியுள்ளன, நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கைக் குறைவாக உள்ளன.

ஆனால் சீனா அதன் பிறகு விழித்துக் கொண்டது கட்டுப்பாடுகள், சிவில் உரிமைகள் குறித்த கடும் விமர்சனங்களுக்கு இடையே இன்று உள்நாட்டிலிருந்து கொரோனா தொற்று புதிதாக இல்லாத நிலையை எட்டி, ஆரம்பத்தில் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டது.
முந்தைய சார்ஸ் வைரஸ் பரவலின் போது 2003-ல் இருந்தது போல் கொரோனா அல்ல, இது சாதாரண அறிகுறிகளிலிருந்து அறிகுறிகளே இல்லாத தொற்றாகக் கூட இருந்துள்ளது.
இதன் அர்த்தம் என்னவெனில் இவர்கள் கொரோனா தொற்றை தாங்கள் அறியாமலேயே பிறருக்குப் பரப்பி விடுகின்றனர். நியூக்ளீய்க் ஆசிட் பரிசோதனைகள் கட்டாயம், இந்தச் சோதனைதான் வைரஸின் மரபணுத் தொடரை நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அடையாளம் காட்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அரசு பரிசோதனைகளை மேற்கொள்வதில் மந்த நிலை காட்டுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் போதிய பரிசோதனைகளே நடத்தப்படுவதில்லை என்று நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக பரவிய ஆசிய நாடான தென் கொரியாவில் தினசரி அடிப்படையில் ஆயிரக்கணக்கானோருக்கு உடல் பரிசோதனை செய்து கட்டுப்படுத்தி வருகின்றன.
நாங்கள் சீனா கடைபிடித்த முறைகளைத் தான் கடைபிடிக்க வேண்டும் என்று கூறவில்லை, ஒவ்வொரு தேசத்திலும் கொரோனா வைரஸ் சூழல் வேறுபட்டதாக இருக்கும், ஆனால் இதனை பொறுப்புடனும், அதன் உண்மை நிலையை அணுகுதலும் அவசியம்.
அரசாங்கங்கள் தேவையான அவசர நடவடிக்கைகளை, அதாவது பலரையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்வது அவசியம், பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஒரு அவசரக் காலக்கட்டமாகும் இது என்று சீன பேராசிரியர் டூ பின் எச்சரித்துள்ளார்.