இந்தியாவில் பொது இடத்தில் தும்மிய நபரை அங்கிருந்தவர்கள் கும்பல் கூடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவிற்கு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதை தவிர்க்க மத்திய-மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் பொது இடத்தில் வாயை மூடாமல் தும்மிய நபரை அங்கிருந்தவர்கள் கும்பல் கூடி தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவாமல் தவிர்க்க ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட வேண்டும் என சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
#Breaking | WATCH: Corona scare triggers panic. A man allegedly thrashed in Kolhapur, Maharashtra, for allegedly sneezing in public.
Aruneel with details. pic.twitter.com/3L773rURKp
— TIMES NOW (@TimesNow) March 19, 2020
எனினும், தாக்கப்பட்ட நபருக்கு சாதாரண தும்மலாக இருக்கலாம், தும்மியதனால் தாக்கப்பட்ட பயங்கரமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.