நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட மு.காவுக்கு 6 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச். எம். எம். ஹரீஸ், எம்.ஐ.எம். மன்சூர், பைசல் காசிம், ஏ.எல்.எம்.நஸீர் உள்ளிட்டோருடன் பாஸித், தவம் ஆகியோரும் போட்டி இடுகின்றனர்.