7 வருட சட்ட இழுபறிக்குப் பின்னர் இன்று டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேறிய பிறகு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
அதவாது, ”கடைசியாக அவர்கள் தூக்கிலடப்பட்டனர். இன்று தான் எங்களுக்கு நீதி கிடைத்தது.
இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு இன்றைய நாள் சமர்ப்பிக்கப்படுகிறது.
நீதித்துறைக்கு, அரசுக்கும் அந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு கிடைத்த வெற்றி இது” என்று கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது” என்று நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகின்றது.
Justice has prevailed.
It is of utmost importance to ensure dignity and safety of women.
Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020