கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுவிஸில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதற்காக மேலும் வழமைக்கு மாறான நடவடிக்கைகளை சுவிஸ் அரசு எடுப்பதற்குத் தயாராக உள்ளது.
எம் சமூகத்தில் வாழ்ந்து வரும் அனைவரிற்கும் ஆதரவு கொடுப்பதே எமது எண்ணம். வைத்தியசாலைகளின் பணிகளை ஆதரிக்க நாங்கள் அனைத்தையும் செய்கின்றோம்.
அனைவரும் அதற்கான நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என சுவிட்சர்லாந்தின் மத்திய அரசு மக்களிடம் கேட்டுள்ளது.
ஒவ்வொரு தனி நபரிற்கும் இதில் பொறுப்பு உண்டு 5 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று நள்ளிரவில் இருந்து பொது இடங்களில் ஒன்று கூடினால் 100 சுவிஸ் பிராங் தண்டமாக அறவிடப்படும் என சுவிஸ் அரசு கூறியுள்ளது.
இவை அனைத்தையும் காவற்துறை முழுமையாக கண்காணித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.
கட்டிடவேலைகளைச் செய்பவர்கள் உரிய சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
தொழிற்சாலைகளிலும், கட்டிட வேலைகள் நடைபெறும் இடங்களிலும் ஒவ்வொருவரிற்கும் இடையிலான 2 மீற்றர் இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
இரவுகளில் வெளியே செல்வததை தடுப்பது பற்றி நாங்கள் பேசியிருந்தோம். ஆனால் அதை நாங்கள் ஒரு புதிய முடிவாக கூறவில்லை. ஏனெனில் அது ஒவ்வொருவரின் சுதந்திரம்.
ஏற்கெனவே நாங்கள் அழைப்பாணையூடாக அறிவித்ததை தொடர்ந்து அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். என சுவிஸ் மத்திய அரசின் பிரதிநிதி அலே பேர்சே கூறியுள்ளார்.
பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்காக பொருளாதார அமைச்சர் 40 பில்லியன் சுவிஸ் பிராங்கை வழங்குவதுடன் மேலும் 32 பில்லியன் பணத்தை அதற்கான வேலைகளிற்காக அடுத்த வாரத்தில் வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும் வேலை செய்யும் மக்களையும், நிறுவனங்களையும் ஆதரிப்பதே இதன் இலக்கு. சுயதொழில் செய்பவர்களையும், பிற நிறுவனங்களின் ஊழியர்களிற்கும் உரிய பணம் கொடுக்கப்பட வேண்டும். கற்பவர்களும், தற்காலிக ஊழியர்களும், சுயதொழில் ஊழியர்களும் வேலையின்மை சலுகைகள் மூலம் உரிய உதவியைப்பெற்றுக்கொள்ளலாம்.
மருத்துவரீதியாகவும், விவசாய ரீதியாகவும் பணியாற்றும் அனைவரிற்கும் சுவிஸ் அரசு நன்றியைத் தெரிவிக்கின்றது. என்றார் பொருளாதாரம் – கல்வி – ஆராய்ச்சி தலைவர் கி பார்மெலேன்.
எங்களிடம் ஒரு வலுவவான நிதி உள்ளது. இப்பொழுது உதவ போதுமான பணம் இருக்கின்றது. வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளன. சில வரிகளை பிற்போடலாம். மத்திய அரசு வங்கிக்குப் பணத்தை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.
இதனூடாக வங்கிகள், குடிமக்களுக்கும் நிறுவனங்களிற்கும் பணத்தை வழங்குவதற்கான பணியை முன்னெடுக்கும்.
ஒரு கட்டுப்பாட்டுடன் இது 500’000 வரை செல்லாம். இது எளிமையான வழி. என்று யுஎலி மௌறர் கூறியுள்ளார்.