இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கொழும்பு மாவட்டத்திலேயே அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னதாக கம்பஹா மாவடடம் முதலிடத்தைப் பிடித்திருந்தது.
இந்நிலையில் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கைப்படி கொழும்பு மாவட்டத்தில் 16 நோயாளர்களும், 10 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 6 பேர் புத்தளம் மாவட்டத்திலும், களுத்துறை மாவட்டத்தில் 04 பேரும், குருநாகலில் 03 பேரும், காலி, கேகாலை, பதுளை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா நோயாளியும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் தவிர, மருத்துவ முகாம்களில் 25 பேரும், வெளிநாட்டவர்கள் 03 பேரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.