இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகள், விமன நிலைத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி உதவுமாறு இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டு அதிகாரசபை கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள போதும், பயணிகளும் , வாகனச்சாரதியும் வீதியில் பயணிப்பதற்கான அனுமதியாக விமானப்பயண டிக்கெட்டைப் பயன்படுத்த முடியும் என பதில் பொலிஸ்மாதிபர் உறுதிப்படுத்தியிருப்பதையும் அதிகாரசபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
எனவே வாகனச்சாரதிகள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, விமானநிலைய டிக்கெட்டைக் காண்பித்து, ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அதனைப் பயன்படுத்தி வெளிநாட்டுப்பயணியை விமானநிலையத்திற்குக் கொண்டு சென்ற பின்னர், சாரதி வீடு திரும்ப முடியும்.
மேலும் இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பொலிஸ் தலைமையகத்தின் 011 2444480, 011 2444481, 011 5978730, 011 5978734, 011 5978720 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.