அம்பாறையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி அநாவசியமாக நடமாடிவர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பொலிஸார் ஒலிபெருக்கிமூலம் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
நாடுமுழுவதும் 60 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அம்பாறை நகரப்பகுதி, கல்முனை மாநகர பகுதி, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு நிந்தவூர், அட்டப்பளம், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, மல்வத்தை உள்ளிட்ட பகுதிகள் நேற்று முதல் இன்று அதிகாலை வரை வெறிச்சோடிக் காணப்பட்டன.