கொரோனா வைரஸ் உங்களை தாக்கி இருந்தால் மொத்தம் மூன்று விதமான முக்கிய அறிகுறிகள் மூலம் அதை கண்டுபிடிக்க முடியும்.
கொரோனா வைரஸ் குறித்து உலக ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். இந்த வைரஸ் எப்படிப்பட்ட வைரஸ் என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல் இந்த வைரஸ் எப்படி உருவானது, எப்படி குணப்படுத்துவது என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் அறிகுறிகள் மற்றும் வெகு சில பின் விளைவுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா அறிகுறி குறித்து மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
-
- இருமல்தான் கொரோனாவின் முதல் அறிகுறி ஆகும். ஆனால் வெறும் சாதாரண வறட்டு இருமல் போல இது இல்லாமல் கொஞ்சம் வலியோடு இருக்கும். நீங்கள் கொரோனா வந்து இருமினால் உங்கள் மூச்சு குழல் அடைக்கும். இருமலின் போதே உங்கள் இதயம் லேசாக வலிக்கும். மூச்சு குழலில் இருமலின் போது ஊசி வைத்து குத்துவது போல வலி ஏற்படும். சில சமயம் உங்கள் தொண்டை எரிவது போல உணர்வு ஏற்படும். இதுதான் உங்களுக்கு ஏற்படும் முதல் அறிகுறி.
- அடுத்த அறிகுறி காய்ச்சல். உங்கள் உடல் சூடு அதிகரிக்கும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். 99.5 டிகிரி ஃபெரன்ஹீட் வரை உங்களுக்கு உடல் வெப்பநிலை இருந்தால் பிரச்சனை, சிக்கல் இல்லை. ஆனால் அதற்கு மேல் உடல் வெப்பநிலை இருந்தால் அதுதான் காய்ச்சல். இது கொரோனாவிற்கு ஒரு அறிகுறி ஆகும்.
- இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு கொரோனா இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை கொஞ்சம் சீரியஸான அறிகுறி என்று உலக சுகாதார மையம் வரையறுக்கிறது. இந்த அறிகுறி இருந்தால் உடனே நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும்.
- இது இல்லாமல் உங்களுக்கு சமயங்கள் வயிற்றுப்போக்கும் அறிகுறியாக இருக்கலாம். காய்ச்சல் இல்லாமல் நெஞ்சு மட்டும் வலித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
- சிலருக்கு அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். ஜலதோஷம், அஜீரண கோளாறு, பசியின்மை, தலைவலி, உடல் வலி, சோர்வு ஆகியவை கூட அறிகுறியாக இருக்கலாம். இதை எல்லாம் நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- அதே சமயம் சிலருக்கு இந்த அறிகுறி எதுவும் இல்லாமலே கொரோனா ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலகில் கொரோனா ஏற்பட்டவர்களில் வெகு சிலருக்கு எந்த விதமான அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.